என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அரசு பேருந்து"
- கடந்த 25 நாட்களாக குப்பை கூளங்களுடன் அரசு பேருந்து ஒன்று பயணம் மேற்கொண்டு வந்தது.
- வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தமிழ்நாடு அரசு பேருந்துகளில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொள்கின்றனர். பண்டிகை காலங்களில் முன்பதிவு செய்தும் பயணத்தை மேற்கொள்கின்றனர். இப்படி லட்சக்கணக்கானோர் பயணிக்கும் பேருந்துகளை சிலர் சுத்தம் செய்து இயக்குவர். சிலர் அப்படியே இயக்குவர்.
இந்த நிலையில், அரசு பேருந்தில் சேர்ந்த குப்பைகளை பெண் பயணி ஒருவர் சுத்தம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 25 நாட்களாக குப்பை கூளங்களுடன் அரசு பேருந்து ஒன்று பயணம் மேற்கொண்டு வந்தது. இந்த குப்பைகளை காண பொறுக்காமல் தனது வீடு போல நினைத்து பயணி மாஞ்சோலை தமிழரசி சுத்தம் செய்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
- அரசு பேருந்துகளில் 'ஷிவ்நேரி சுந்தரி' என்ற பெயரில் பணிப்பெண்களை பணியமர்த்த முடிவு
- மகாராஷ்டிரா அரசின் இந்த முடிவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம்
விமானங்களில் இருக்கும் ஏர் ஹோஸ்டஸ் போல அரசு சொகுசு பேருந்துகளில் பணிப்பெண்களை நியமித்து பயணிகளை கவர மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் அரசு சிவ்னெரி எலெக்ட்ரிக் சொகுசு பேருந்துகளில் மட்டும் இந்த பணிப்பெண்கள் அமர்த்தப்பட இருக்கின்றனர்.
முதற்கட்டமாக மும்பை-புனே வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகளில் 'ஷிவ்நேரி சுந்தரி' என்ற பெயரில் பணிப்பெண்களை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்பணிப்பெண்கள் சிவ்னெரி சுந்தரி என்று அழைக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் பேருந்தில் ஏறும் பயணிகளை வரவேற்பது மற்றும் பயணத்தின்போது பயணிகளுக்கு உதவுவது போன்ற வேலையில் ஈடுபடுவார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா அரசின் இந்த முடிவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் உள்ள அரசு பேருந்துகளின் மோசமான நிலை மற்றும் பேருந்து நிலையங்களில் உள்ள மோசமான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதே விட்டுவிட்டு தேவையில்லாத வேலைகளை அரசாங்கம் செய்கிறது என்று அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் விஜய் தெரிவித்தார்.
- கர்ப்பிணி பெண்ணிற்கு பேருந்திலேயே செவிலியர் பிரசவம் பார்த்தார்.
- செவிலியருக்கு ஓராண்டுக்கு இலவச பயணம் செய்யும் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் அண்ணனுக்கு ராக்கி கட்ட வேண்டும் என்பதற்காக நிறைமாத கர்ப்பிணி ஒருவர் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென வலி ஏற்பட்டுள்ளது.
அப்போது பேருந்தில் பயணித்த ஒரு செவிலியர் நடத்துநர் பாரதியுடன் இணைந்து கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தனர். அந்த கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதனை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, தாய் மற்றும் பிறந்த குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிய வந்தது.
இந்நிலையில், பேருந்தில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பேருந்தில் பயணிக்கும் வகையில் இலவச பயண பாஸ் ஒன்றை தெலங்கானா அரசு போக்குவரத்துக் கழகம் வழங்கியுள்ளது.
பிரசவத்திற்கு உதவிய செவிலியர் அலிவேலு மங்கமாவுக்கும் ஓராண்டுக்கு இலவச பயணம் செய்யும் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
- நிலச்சரிவில் சிக்கி இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
- ராணுவம் அமைத்த பெய்லி பாலம் வழியாக பேருந்து எடுத்துச் செல்லப்பட்டது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பெய்த கனமழையால், நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், வயநாடு மாவட்டத்தில் முண்டகையில் பயங்கர நிலச்சரிவும், காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது.
இதனால், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இயற்கை பேரிடர் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் சூரல் மலையில் சிக்கிய அரசுப் பேருந்து 6 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து மீட்கப்பட்ட நிலையில், ராணுவம் அமைத்த பெய்லி பாலம் வழியாக பேருந்து எடுத்துச் செல்லப்பட்டது.
சூரல் மலை முதல் கல்பட்ட பகுதி வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையில் தினசரி பேருந்து இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சூரல் மலையில் நிலச்சரிவுக்கு முன்னதாக பேருந்து இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. அதன்பிறகு, நிலச்சரிவு ஏற்பட்டதால் பேருந்து இயக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.
இந்த சூழ்நிலையில், 6 நாட்களுக்கு பிறகு பேருந்து மீட்கப்பட்டுள்ளது.
- ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை இயக்கி நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
- இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சேலத்திலிருந்து ஈரோடு வழியே இயக்கப்பட்ட அரசு பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்றதால், பேருந்து தார் சாலையில் மோதி தீப்பொறி பறக்க சென்றது. ஆனால் ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை இயக்கி நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சேலம் - ஈரோடு இடையே அரசுப் பேருந்து ஒன்று திடீரென பழுதானதால், பயணிகளை இறக்கிவிட்டு மாற்று வண்டியில் அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் ஓட்டுநரும் நடத்துநரும். பழுதடைந்த பேருந்தினை ஈரோடு பணிமனைக்கு கொண்டு செல்லும் பொழுது, பேருந்தின் முன்சக்கரம் கழன்றதால், பேருந்து தார் சாலையில் மோதி தீப்பொறி பறக்க சென்றது.
பேருந்தில் பயணிகள் இல்லாததாலும், சாமர்த்தியமாக ஓட்டுநர் பேருந்தினை இயக்கியதாலும், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
- சமயோசிதமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநருக்கும் நடத்துனருக்கும் பாராட்டுகள்.
- பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது,
சென்னை அடையாறு எல்.பி.சாலையில் மாநகரப் பேருந்து எரிந்ததாக செய்திகள் வந்துள்ளன. பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாவண்ணம் சமயோசிதமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநருக்கும் நடத்துனருக்கும் பாராட்டுகள்.
விடியா திமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படாதது குறித்தும், முறையான பராமரிப்பு இல்லாமல் இயங்கும் பழுதடைந்த பேருந்துகள் குறித்தும் தொடர்ச்சியாக நான் சுட்டிக்காட்டி வந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இதுபோன்று மக்கள் உயிருக்கே ஆபத்தான விபத்துகள் ஏற்பட காரணமாக இருக்கும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
அரசுப்பேருந்துகளில் நம்பி பயணிக்கும் பொதுமக்களின் உயிரோடு விளையாடாமல், பயன்பாட்டில் இருக்கும் பேருந்துகளுக்கு தர ஆய்வு நடத்தியும், புதிய பேருந்துகளை இனியாவது கொள்முதல் செய்தும் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.
- அடையாறில் ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
- அரசு பேருந்து தீ விபத்து குறித்த காரணம் இதுவரை தெரியவில்லை.
சென்னை அடையாறில் ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
பிராட்வே முதல் கேளம்பாக்கம் சிறுசேரி வரை செல்லும் 109 சி அரசு பேருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
முதற்கட்ட தகவலாக சாலையில் சென்று கொண்டிருந்த போது பேருந்தில் இருந்து புகை வந்ததையடுத்து அதில் பயணித்து கொண்டிருந்தவர்கள் பேருந்தை விட்டு இறங்கி இருக்கின்றனர். சற்று நிமிடங்களில் அரசு பேருந்தானது எரிய தொடங்கி உள்ளது.
இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். புகை ஏற்பட்டதையடுத்து பயணிகள் வெளியேறியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
அரசு பேருந்து தீ விபத்து குறித்த காரணம் இதுவரை தெரியவில்லை.
- அரசு பேருந்து ஒரு புற படிக்கட்டு முழுவதுமாக சேதமடைந்த நிலையில் ஒரே ஒரு படிக்கட்டில் மட்டும் ஒரு வழிபாதை போல பயணிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும். இல்லையெனில் புதிய அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை:
மதுரை மண்டல போக்குவரத்துத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் ஏராளமான அரசு பஸ்கள் ஓட்டை உடைசலாக பராமரிப்பின்றி தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் போக்குவரத்து டெப்போவில் இருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு இயக்கப்படும் டி.என்.58-என்.1542 என்ற பதிவெண் கொண்ட அரசு பேருந்தானது பின்புற கதவுகள் சேதமடைந்துள்ளது. அந்த கதவுகள் பின்புற வாசலில் சாய்த்து வைக்கப்பட்ட நிலையிலேயே இயக்கப்படுகிறது.
இதனால் பின்புற படிக்கட்டை பயணிகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆபத்தான முறையில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை பேருந்து இயக்கப்பட்டபோது பின் வாசல் வழியாக ஏறுவதற்கு மாணவர்கள் முயற்சி செய்த போது வாசலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
எதிர்பாராதவிதமாக அவசர காலகட்டத்தில் இது போன்ற படிக்கட்டுகளில் ஏற முற்பட்டால் பேருந்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயகரமான நிலையில் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.
ஆனாலும் இதனை சற்றும் உணராத போக்குவரத்து துறை அதிகாரிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு பேருந்தினை இயக்குவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே போக்குவரத்து துறை சார்பில் ஆபத்தான நிலையில் உள்ள பேருந்துகளை ஆய்வு செய்து உரிய அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என போக்குவரத்து துறை தெரிவித்த நிலையிலும் மதுரை மண்டலத்தில் தொடர்ச்சியாக ஏராளமான அரசு பேருந்துகள் ஓட்டை உடைசலாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு பொதுமக்களுடைய உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இயக்கப்பட்டு வருவது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பள்ளி மாணவ-மாணவிகளின் உயிரோடு விளையாடும் வகையில் இதுபோன்று ஆபத்தான முறையில் பள்ளி வேளைகளில் இயக்கப்படும் அரசு பேருந்துகளால் மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே இது போன்ற அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும். இல்லையெனில் புதிய அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த அரசு பேருந்து ஒரு புற படிக்கட்டு முழுவதுமாக சேதமடைந்த நிலையில் ஒரே ஒரு படிக்கட்டில் மட்டும் ஒரு வழிபாதை போல பயணிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மதுரையில் ஏராளமான அரசு பேருந்துகள் ஓட்டை உடைசலாக இயக்குவதற்கு தகுதியற்ற முறையில் ஆபத்தான முறையில் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- பேருந்தில் ஏறிய காவலர் டிக்கெட் எடுக்கமுடியாது என ரகளையில் ஈடுபட்ட வீடியோ வைரலானது.
- நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் அரசு பேருந்தில் ஏறிய ஒரு காவலர் டிக்கெட் எடுக்க மறுத்து ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமீபத்தில் வைரலானது. அதில், அரசு பேருந்தில் அரசு பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள்தான். எங்களுக்கும் டிக்கெட் கிடையாது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக விளக்கமளித்த போக்குவரத்துத்துறை, போலீசார் பேருந்தில் பயணிக்கையில் கட்டாயம் டிக்கெட் எடுக்கவேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்தத் தொகையையும் போக்குவரத்துத்துறை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது என தெரிவித்தது.
இதற்கிடையே, சென்னையில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசு பேருந்துகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
இந்த நடவடிக்கையால் போலீசாருக்கும், போக்குவரத்துத் துறைக்கும் இடையே மோதல் போக்கு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை செங்கல்பட்டு அருகே வாரண்ட் வைத்திருந்த போலீஸ்காரரிடம் டிக்கெட் எடுக்கும்படி கண்டக்டர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது.
இதேபோல், திருநெல்வேலியில் உள்ள வள்ளியூரில் போக்குவரத்து ஆய்வாளர் ஒருவர் நாகர்கோவில் நோக்கிச் சென்ற அரசு பேருந்தை ஓட்டிச் சென்ற 3 டிரைவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தார். சீட் பெல்ட் அணியாதது, யூனிபார்ம் சரியாக அணியாதது தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் குற்றம் சாட்டுவதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். காவல்துறைக்கும், போக்குவரத்துத்துறைக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் தொடருமா என்பது அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் இருந்து தெரிய வரும்.
- 90 லட்சம் குடும்பங்களுக்கு ₹500 சிலிண்டர் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி
- அனைத்து வெள்ளை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் 500 ரூபாய்க்கு சமையல் சிலிண்டர் வழங்கப்படும்
தெலங்கானாவில் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த 200 யூனிட் வரை இலவச மின்சாரம் மற்றும் ₹500 சிலிண்டர் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி
அனைத்து வெள்ளை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் 500 ரூபாய்க்கு சமையல் சிலிண்டர் வழங்கப்படும் என்றும், மகாலட்சுமி திட்டத்தின் மூலம் மொத்தம் 40 லட்சம் குடும்பங்கள் இதில் பயனடைவார்கள் என்றும் அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி தெரிவித்தார்.
தெலுங்கானாவில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயண வசதியை வழங்கும் திட்டத்தையும், ராஜீவ் ஆரோக்யஸ்ரீ திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக மேம்படுத்தப்பட்ட காப்பீட்டு திட்டத்தையும் டிசம்பர் 9-ஆம் தேதி காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- திட்டம் முதற்கட்டமாக உதகையில் நாளை தொடங்குகிறது.
- மலை கிராமங்களிலும் விரிவுப்படுத்தப்பட உள்ளதாக தகவல்.
2024- 25ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டு பட்ஜெட்டில் மலைப் பிரதேசங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இந்த திட்டம் நாளை முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி அளித்துள்ளார்.
இந்த திட்டம் முதற்கட்டமாக உதகையில் நாளை தொடங்குகிறது.
இது படிப்படியாக மற்ற மலை கிராமங்களிலும் விரிவுப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
- அனைத்து மாநகர பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பின் இயக்க வேண்டும்.
- சென்னையில் இயக்கப்படும் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மேற்கூரை, பாகங்களை சரியாக பரிசோதித்து இயக்க வேண்டும்.
சென்னை:
சென்னையில் நேற்று ஓடும் பேருந்தின் இருக்கைக்கு கீழே இருந்த பலகை உடைந்து கீழே விழுந்த பெண் பயணி படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த சம்பவத்தையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
* அனைத்து மாநகர பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பின் இயக்க வேண்டும்.
* சென்னையில் இயக்கப்படும் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மேற்கூரை, பாகங்களை சரியாக பரிசோதித்து இயக்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.
மிக மோசமான நிலையில் உள்ள அரசு பேருந்துகளை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்